தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வாலிபருக்கு நேற்று முன்தினம் திருமணம் முடிந்த பிறகு நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மணமகன் வீட்டின் அருகே சிலர் கூடியிருந்தனர்.
அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல் அரிவாள்களை எடுத்து அங்கிருந்த பொதுமக்களை சரமாரி வெட்டினர்.
அதில் நெட்டூரை சேர்ந்த ரமேஷ் (வயது 49), அவரது மகன் அருள் மாறன் (23), கணேசன் மகன் சந்தோஷ்குமார் (21), காபிரி யேல் மகன் ராயப்பன் (18), ஆய்க்குடி அருகே ஆனந்தபுரத்தை சேர்ந்த சேகர் மகன் ராம்குமார் (20) மற்றும் திருமணத்துக்கு மேளம் அடிக்க வந்திருந்த சாம்பவர்வடகரையை சேர்ந்த பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஆலங்குளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ராயப்பன், அருண்மாறன், ரமேஷ், ராம்குமார் ராம்குமார் ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக