புதன், 12 ஆகஸ்ட், 2026

பிரிட்டிஷ் கொலம்பியா சீட் பெல்ட் அணிய அடம்பிடித்த குழந்தை!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டொராண்டோ நோக்கி போர்ட்டர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அதில் பயணித்த சிறு குழந்தை ஒன்று தனது இருக்கையில் அமராமல் எழுந்து நின்றதாகவும், சீட் பெல்ட் அணிய மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

விமானப் பாதுகாப்பு விதிகளின்படி, குழந்தையைப் பாதுகாப்பாக இருக்கையில் அமரவைக்க முடியாததால் விமானத்தைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானம் மீண்டும் டெர்மினலுக்குத் திரும்பியுள்ளது. தொடர்ந்து, குழந்தையையும் அவரது பெற்றோரையும் அவர்களது உடைமைகளுடன் விமானத்தில் இருந்து இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனால், குழந்தை மற்றும் பெற்றோரை இறக்கிவிட்டு மீண்டும் விமானத்தை இயக்குவதற்குள் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இயக்க நேரம் இரவு 12.30 மணியுடன் முடிவடைவதால், அதற்குள் விமானத்தை மீண்டும் இயக்க முடியவில்லை.

இதனால், அந்த விமானத்தை அன்றைய தினம் தொடர்ந்து இயக்க முடியாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டனர். அவர்களுக்கு மறுநாள் டொராண்டோ செல்லும் மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு போர்ட்டர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஒரு சிறு குழந்தையின் அடம்பிடிப்பின் காரணமாக ஒட்டுமொத்த விமானமே ரத்து செய்யப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அதே நேரத்தில், சிறு குழந்தையாக இருந்தாலும் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

யாழ்-செம்மணி மனித புதைகுழி 539 மனித எலும்புக்கூடு!!

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி இதுவரை மொத்தமாக 539 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 524 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

516வது இலக்கமிடப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில் மீட்கப்பட்ட தாயத்து போன்ற ஒன்றும்,மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

தங்காலை குடவெல்லயில் துப்பாக்கிச் சூடு

தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

மீன்பிடிப் படகு உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

பாதாள உலகக் குழுத் தலைவன் பேராதனை காவல் நிலையத்திடம் !

மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற சர்வதேச குற்றவாளி, மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இன்டர்போல் (Interpol) அமைப்பினால் சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த 41 வயதுடைய இந்த சந்தேகநபர், ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உதவி காவற்துறை அத்தியாட்சகர் ரோஹன் ओलுகல தலைமையிலான சிறப்பு காவற்துறை குழுவினர் நேற்றைய தினம் அவரை நாட்டிற்கு அழைத்து வந்தனர். 

 வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் மலேசிய காவற துறையினரின் கூட்டுச் சிறப்பு நடவடிக்கையின் போதே இவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் “கஞ்ச்பானி இம்ரான்” என்ற பிரபல பாதாள உலகக் குழுத் தலைவனின் முக்கிய கூட்டாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 2014 ஆம் ஆண்டு பேராதனை பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று, கடுமையாகத் தாக்கி படுகாயப்படுத்தியமை, 2016 ஆம் ஆண்டு: பேராதனைப் பகுதியில் நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை ஆகியன சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகளாகும்.

 இவருடன் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 31 வயதுடைய மற்றுமிரு நபர்களிடமும் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!!

சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனித்தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார். தமிழ்நாட்டின் சமூக நீதி, மாணவர்களின் எதிர்காலம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றுக்கு நீட் தேர்வு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இத்தீர்மானத்தில், தமிழ்வழி மாணவர்களுக்கு நீட் தேர்வால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 

நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கிறது. நீட் தேர்வால் பயிற்சி மையங்களுக்கே லாபம் கிடைக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்யஒன்றிய அரசின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். 

நீட் விலக்கு கோரிச் சட்டமன்றத்தில் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீட் தேர்வால் மாணவர் சேர்க்கையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு, வரம்பின்றி அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. 

மாணவர்கள் நீட் பயிற்சியில் மட்டுமே முழுவனம் செலுத்தக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 2021ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 

பள்ளிக் கல்வியைப் புறந்தள்ளிவிட்டு ஒரு நுழைவுத் தேர்வு மாணவர்களின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறைகேடுகள் நடக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

அறுகம்பை மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகையான மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


 நேற்று இரவு அறுகம்பை முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 408 பியர் கேன்களும் பல்வேறு வகையான 36 மதுபானப் போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 தற்போது அறுகம்பை சுற்றுலா வலயத்திற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வருகை தருவதால், அங்கு சிறிய அளவிலான விடுதிகளை நடாத்திச் செல்லும் சிலர் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களைக் கொண்டுவந்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 கைப்பற்றப்பட்ட மதுபானத்தின் பெறுமதி சுமார் 4,20,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மதுபானப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொலம்பியா நிலநடுக்கம் -111 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 அத்துடன், காளி (Cali) நகரமும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்காக போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து பேரழிவு நிவாரணக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியில் உள்ள சொக்கோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சுமார் 96 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கிப்தோ உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குக் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பெரெய்ரா , மனிசாலேஸ் , கிப்இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் ஒன்பது மாகாணங்களிலும் 32 மாகாணத் தலைநகரங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. 

 மேலும், அண்டை நாடான வெனிசுலாவின் தாசிரா மாநிலம், பாரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவுமில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.தோ , ஆர்மீனியா , கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய விமான நிலையங்களின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Thank You Google

Thank You Google
Thanks