செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!!

சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனித்தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார். தமிழ்நாட்டின் சமூக நீதி, மாணவர்களின் எதிர்காலம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றுக்கு நீட் தேர்வு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இத்தீர்மானத்தில், தமிழ்வழி மாணவர்களுக்கு நீட் தேர்வால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 

நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கிறது. நீட் தேர்வால் பயிற்சி மையங்களுக்கே லாபம் கிடைக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்யஒன்றிய அரசின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். 

நீட் விலக்கு கோரிச் சட்டமன்றத்தில் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீட் தேர்வால் மாணவர் சேர்க்கையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு, வரம்பின்றி அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. 

மாணவர்கள் நீட் பயிற்சியில் மட்டுமே முழுவனம் செலுத்தக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 2021ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 

பள்ளிக் கல்வியைப் புறந்தள்ளிவிட்டு ஒரு நுழைவுத் தேர்வு மாணவர்களின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறைகேடுகள் நடக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks