புதன், 17 ஜூன், 2026

யோஷித ராஜபக்ச கைது!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அவரை நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தாக்குதல்!!

மெரிக்காவின் வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூரத் தாக்குதல்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) நிறுவனம் முறியடித்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் நடத்தவிருந்த தற்காப்புக் கலை போட்டித் தொடரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 தாக்குதல்தாரர்கள் வெடிபொருட்களை ஏற்றிய ட்ரோன்களைப் பயன்படுத்தி, இந்தத் தொடரைக் காண வருகை தரும் பெருந்திரளான மக்களை இலக்கு வைத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அரச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் களமிறங்கிய பாதுகாப்புப் பிரிவினர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அதனுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்த அதே நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டமும் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எலோன் மஸ்க் போன்ற முக்கியஸ்தர்கள் இந்தத் தாக்குதல்தாரர்களின் இலக்காக இருந்ததாக கூறப்படுகின்றது. 

 இந்த நிலையில் அவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நீட் வினாத்தாள்கள்!!

மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21- ஆம் தேதி மதியம் 02.00 மணி முதல் மாலை 05.15 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த மே 3- ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த தேர்வை முழுமையாக ரத்துச் செய்வதாக மத்திய கல்வி அமைச்சகமும், தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும் அறிவித்திருந்தனர். இந்த சூழலில் நீட் மறுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவதை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் டெல்லியில் இருந்து மதுரைக்கு ராணுவ பாதுகாப்புடன் விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் முதலாவது ஹெலிகாப்டர் வந்து இறங்கியுள்ளது. 

அஞ்சல்துறை சார்பில் வினாத்தாள் கொண்டுவர நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது. இந்த வினாத்தாள் பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கக்கூடிய லாக்கரில் வைக்கப்படவுள்ளது. மேலும் மற்றொரு ஹெலிகாப்டர் வர இருப்பதாக கூறப்படுகிறது. 

அதில் வரக்கூடிய வினாத்தாள்கள் கனரா வங்கியின் லாக்கரில் வைக்கப்படவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 13,000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் மறுதேர்வை எழுதுகின்றனர். இந்த வினாத்தாள்கள் ஜூன் 21ஆம் தேதி அன்று தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 16 ஜூன், 2026

கடற்படை முற்றுகையை நீக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகளின் தீவிர மத்திஸ்தத்துவத்தின் மூலம் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, லெபனான் உள்ளிட்ட அனைத்து முன்னணிகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கும், சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) எவ்வித கட்டணமுமின்றி கப்பல் போக்குவரத்திற்காக திறப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) முழுமையான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வாக அமையவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், வரும் பெப்ரவரி அல்லாமல், ஜூன் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் சிலை சர்ச்சை - கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரர்

நாடாளுமன்றில் பொய்யுரைக்கும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் உடனடியாக பதவி விலக வேண்டும் என சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்காக அனுமதிகள் கோரிய போது, அதனை கடற்தொழில் அமைச்சர் மறுத்திருந்தார்.

இது தொடர்பிலான செய்திகள் வெளியாகிய நிலையில், நாடாளுமன்றில் தான் அவ்வாறு மறுக்கவில்லை என பொய்யுரைத்துள்ளார்.இவ்வாறான பொய்யர்கள் அமைச்சராக பதவி வகிக்க முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார்.

ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி-முதல்வர் விஜய்

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி என்று தவெக அரசு அறிவித்திருந்தது.

முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி கோரி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் 25ம் தேதி 50,000/- வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட நேற்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்,
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

திங்கள், 15 ஜூன், 2026

முதலில் விஜய்- சங்கீதாவை சமரச மையத்துக்கு அனுப்ப உத்தரவு!!

விஜய்- சங்கீதாவை சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் நீதிபதி சுஜாதா உத்தவிட்டார். மேலும் வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகரும், முதல்வருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

சங்கீதா அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சங்கீதா கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி ஆன்லைன் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு, ஏப்ரல் 20ம்தேதி அன்று முதல்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் கட்டாயம் அன்றைய தினம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. 

அப்போது, தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணி இருப்பதால் தன்னால் அன்று ஆஜராக முடியாது என்றும், விசாரணை தேதியை ஒத்திவைக்க கேட்டு மனு அளித்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை ஜூன் 15ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, சங்கீதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருப்பதாலும் அவர் நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை உள்ளதாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கினை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இவர் பிரபலமானவர் என்பதால் இது குடும்ப வழக்கு என்பதாலும் ரகசியமாக நடத்தப்பட வேண்டும் ஊடகங்களுக்கும் பொதுவெளியிலும் தெரியாமல் நீதிமன்றம் இதனை பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டது. 

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடிகர் விஜய் ஆஜராக அனுமதி வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் இருவரும் நீதிபதி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நடிகர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன்பு ஆஜராகி தனது வாதத்தை பேசுவாரா அல்லது பணிச்சுமை காரணமாக வழக்கை ஒத்தி வைக்க வழக்கறிஞர்கள் மூலம் மனு அளிப்பாரா என்பது பரபரப்பு நிலவியது. 

இதனால், முதல்வர் விஜய் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு மேலும் சூடு பிடித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் ஏராளமான ஊடகங்கள் வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு குவிந்திருந்தனர். 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிபதி சுஜாதா முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பு வழக்கறிஞர்களும் நேரில் ஆஜராகி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த வேண்டும் என்றும் வாதிட்டனர். 

இதற்கு நீதிபதி சுஜாதா, ‘வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த சங்கீதா தரப்புக்கு சம்மதமா? என்று கேட்டார். இதற்கு அவர்கள் சரி என்று கூறினர். வீடியோ கான்பரன்ஸ்

Thank You Google

Thank You Google
Thanks