வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், தெற்கு ஈரானின் சிரிக் (Sirik) பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றின் மீது எதிரி தரப்பு நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், "ஈரானின் சிரிக் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது எதிரி தரப்பு நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் தீவில் இருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடாரை, IRGC விண்வெளிப் படைப்பிரிவினர் (Aerospace Force) சில மணிநேரங்களுக்கு முன்பு தாக்கி அழித்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"இது ஆக்கிரமிப்பு எதிரிக்கு விடுக்கப்படும் ஒரு கடுமையான எச்சரிக்கையாகும்; அவர்கள் தங்கள் வான்வழித் தூண்டுதல்களையும், ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கடத்தலையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மீண்டும் இத்தகைய மீறல்களும் ஆக்கிரமிப்புகளும் நடந்தால், புவியியல் எல்லைகளைக் கடந்து பதிலடி கொடுக்க IRGC விண்வெளிப் படைப்பிரிவு முழுத் தயார் நிலையில் உள்ளது" என்று IRGC எச்சரித்துள்ளது.
மேலும், "விதிமுறைகளை மீறும் நிறுவனங்களும், ஆக்கிரமிப்பு எதிரியின் ஏமாற்று வலையில் சிக்கிச் செயல்படும் நிறுவனங்களும் இன்னும் கடுமையான தண்டனை நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக