இந்த கேள்விகளுக்கு விடை தேடினால், நாம் 15 ஆண்டுகளுக்கு முன்னால் நேட்டோ (NATO) படைகளால் தகர்க்கப்பட்ட லிபியாவின் ஒரு பிரம்மாண்ட வரலாற்று பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதுதான், முஅம்மர் கடாபி (Muammar Gaddafi) உருவாக்கிய ‘மகா செயற்கை நதி’ (Great Man-Made River) திட்டம்.
சஹாரா பாலைவனத்தின் அடியில், சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு தேங்கிய தூய்மையான, பழங்கால நிலத்தடி நீர் இருப்பு (Nubian Sandstone Aquifer System) உள்ளது.
இதுதான் உலகின் மிகப்பெரிய புதைபடிவ நீர் (Fossil Water) ஆதாரமாகும்.
இந்த நீரை எடுத்து, ஒட்டுமொத்த பாலைவனத்தையும் விவசாய பூமியாக மாற்ற கடாபி ஒரு மாபெரும் மெகா திட்டத்தை தீட்டினார்:
லிபியாவின் பரப்பளவில் 90% க்கும் மேல் வறண்ட பாலைவனமாகும்.
நாட்டின் பெரும்பாலான மக்கள் கடலோரப் பகுதிகளிலேயே வாழ்ந்தனர். இந்தச் சூழலை மாற்றியமைக்க, மனித வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான நிலத்தடி குழாய் அமைப்பை கடாபி உருவாக்கினார்.
இதன் நீளம் பிரதாண்டமானது. 4,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்திற்கு இந்த குழாய்கள் பதிக்கப்பட்டன. இது இந்தியாவின் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள தூரத்தை விட அதிகம்!
இதில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கான்கிரீட் குழாயும் 4 மீட்டர் விட்டமும் (Diameter), 7.5 மீட்டர் நீளமும் கொண்டவை.
அதாவது, ஒரு பெரிய லாரியே அந்த குழாய்க்குள் சுலபமாக நுழைந்து சென்றுவிட முடியும்.
இந்த பிரம்மாண்ட குழாய்களை தயாரிப்பதற்காகவே லிபியாவின் பிரேகா (Brega) மற்றும் சாரிரி (Sarir) ஆகிய நகரங்களில் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட தொழிற்சாலைகள் நள்ளிரவு பகலாக இயங்கின.
ஆவியாதல் (Evaporation) மூலம் தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும், போர்க்கால பாதுகாப்பிற்காகவும் ஒட்டுமொத்த நீர் விநியோக அமைப்பும் பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டது.
பாலைவனத்தின் நடுவே, மனித நடமாட்டமே இல்லாத ஆழமான பகுதிகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள கடலோர நகரங்களுக்குக் கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல.
சஹாரா பாலைவனத்தின் அடியில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த இந்த நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுக்க, 1,300-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் (Wells) அமைக்கப்பட்டன.
இவற்றில் பல கிணறுகள் 500 மீட்டர் (சுமார் 1,600 அடி) ஆழம் கொண்டவை.
இந்தத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 6.5 மில்லியன் கன மீட்டர் (65 Lakh Cubic Meters) தூய்மையான நன்னீர் பாலைவனத்திலிருந்து கடலோர நகரங்களான திரிபோலி (Tripoli), பங்காசி (Benghazi) மற்றும் சிர்தே (Sirt) ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
புவியீர்ப்பு விசை (Gravity) மற்றும் அதிநவீன ராட்சத மின்சார பம்புகள் மூலம் தண்ணீர் மலைகளையும் மேடுகளையும் கடந்து தடையின்றிப் பாய்ந்தது. கணினிமயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒட்டுமொத்த நீர் ஓட்டமும் கண்காணிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் இறுதி இலக்கு வெறும் குடிநீர் வழங்குவது மட்டுமல்ல.
லிபியாவை ஆப்பிரிக்காவின் "தானியக் களஞ்சியமாக" மாற்றுவதுதான்.
பாலைவனத்தின் நடுவே வட்ட வடிவமான பிரம்மாண்ட விவசாயப் பண்ணைகள் (Center-pivot irrigation) உருவாக்கப்பட்டன. விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட பச்சை நிறப் புள்ளிகளாகத் தெரியும் அளவிற்குப் பாலைவனம் சோலைவனமாக மாறியது.
கோதுமை, ஓட்ஸ், சோளம், காய்கறிகள் மற்றும் பழங்கள் லிபிய மண்ணிலேயே விளைவிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலை முழுமையாக மாறத் தொடங்கியது.
லிபியாவைத் தாண்டி வறட்சியால் பாதிக்கப்படும் ஆப்பிரிக்காவின் பிற சாஹெல் நாடுகளுக்கும் (சூடான், சாட், நைஜர் போன்றவை) இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் தண்ணீரும் உணவும் வழங்கி, ஒட்டுமொத்த வட ஆப்பிரிக்காவையும் ஒரு வல்லரசாக மாற்றுவதே கடாபியின் கனவாக இருந்தது.
சுருக்கமாகச் சொன்னால் லிபிய மக்கள் இதனை "கடவுள் கொடுத்த பரிசு" என்றும், உலகப் பொறியியலாளர்கள் இதனை "உலகின் எட்டாவது அதிசயம்" (8th Wonder of the World) என்றும் அழைத்தனர்.
வெளிநாட்டு நிறுவனங்களின் கடனோ, உலக வங்கியின் (World Bank) உதவியோ இல்லாமல், லிபியாவின் சொந்தப் பணத்தில் ($25 Billion+) கட்டப்பட்ட இந்தத் தற்சார்புதான் மேற்கத்திய சாம்ராஜ்யங்களின் கண்ணை உறுத்தியது.
இங்கேதான் 'சாம்ராஜ்யங்களின்' (Western Empire) சுயரூபம் வெளிப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகள் தங்களின் சொந்த காலில் நிற்பதை, மேற்கத்திய நாடுகள் என்றுமே விரும்புவதில்லை.
நீங்கள் எப்போதும் மேற்கத்திய நாடுகளிலிருந்து உணவையும், பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டும்; 'சர்வதேச நாணய நிதியத்திடம்' (IMF) கையேந்தி நிற்க வேண்டும் என்பதே அவர்களின் கணக்கு.
இதற்கு ஆதாரமாக, 1987-ல் வெளியிடப்பட்ட சிஐஏ (CIA) ரகசிய ஆவணம் ஒன்று தற்பொழுது வெளிவந்துள்ளது.
அதில் இந்த நீர் திட்டத்தை ஒரு "அச்சுறுத்தல்" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்:
"இந்த நீர் திட்டம் லிபியாவின் தண்ணீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டது. இதனால், மேற்கத்திய நாடுகளிலிருந்து அவர்கள் உணவு இறக்குமதி செய்வதை பெருமளவு குறைத்துவிடுவார்கள்.
"என்பதே அந்த அச்சுறுத்தல்.
அதாவது, ஒரு நாடு தன் சொந்த மக்களின் பசியை போக்க நினைப்பது, இவர்களுக்கு அச்சுறுத்தலாக தெரிந்தது!
இதன் விளைவு என்னவென்று தெரியுமா?
15 ஆண்டுகளுக்கு முன்பு, 2011 ஜூலை 22 அன்று, நேட்டோ (NATO) போர் விமானங்கள் இந்த மாபெரும் நீர் திட்டத்தின் தளங்கள் மீதும், பிரேகா (Brega) நகரில் இருந்த குழாய் உற்பத்தி தொழிற்சாலை மீதும் குண்டுகளை வீசி அதை தரைமட்டமாக்கின.
சஹாராவும், வடக்கு சாஹெல் பகுதியும் எப்போதும் ஏழையாகவே இருக்க வேண்டும், மக்கள் தொகை பெருகக் கூடாது, எப்போதும் தங்களை சார்ந்து வாழ வேண்டும் என்பதை மேற்கத்திய நாடுகள் இதன் மூலம் உறுதி செய்தன.
"சுயாட்சியாவது, சுதந்திரமாவது? அதெல்லாம் ஆப்பிரிக்காவிற்கு தேவையில்லை. ஒரு நாட்டை அடித்து நொறுக்கி, கற்காலத்திற்கு தள்ளி, பின்னர் நம்மிடம் கடன் வாங்க வைப்பது... கடனுக்கு ஈடாக அவர்களின் இயற்கை வளங்களை மொத்தமாக சுரண்டுவது..." – இதுதான் இன்றைய நவீன காலனித்துவத்தின் அப்பட்டமான சூழ்ச்சி.
ஆப்பிரிக்கா ஏழை அல்ல; அது திட்டமிட்டு ஏழையாக வைக்கப்பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை!
அதற்கு முஅம்மர் கடாபியின் வீழ்ச்சியும், லிபியாவின் இன்றைய நிலையும் ஒரு வாழும் சாட்சியாகும்.
நேட்டோ (NATO) படைகள் லிபியாவின் மீது குண்டுகளை வீசியது அங்கு ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக அல்லமாறாக, ஆப்பிரிக்கா தன் சொந்தக் காலில் நின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
மேற்கத்திய டாலர் ஆதிக்கத்தை தகர்க்க முயன்ற 'ஆப்பிரிக்க தங்க தினார்' (Gold Dinar) திட்டமும், அவர்களின் உணவு மற்றும் தண்ணீர் ஏகபோக உரிமையை உடைக்க முயன்ற 'மகா செயற்கை நதி' (Great Man-Made River) திட்டமும் ஒன்றிணைந்த போது, அது மேற்கத்திய சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தையே உலுக்கியது.
ஒரு ஆப்பிரிக்க நாடு உலக வங்கியிடம் கடன் வாங்காமல், சொந்தத் தண்ணீரில் விவசாயம் செய்து, சொந்தத் தங்க நாணயத்தில் எண்ணெய் விற்றால், தங்களின் Neocolonialism சூதாட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்பதை ஏகாதிபத்திய நாடுகள் நன்கு அறிந்திருந்தன.
அதன் விளைவாகவே, கடாபி கொடூரமாகக் கொல்லப்பட்டார்; உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்பட்ட நதித் திட்டம் குண்டுகளால் தகர்க்கப்பட்டது. இன்று லிபியா சிதைந்து, ஆப்பிரிக்கா மீண்டும் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
"ஆப்பிரிக்காவை ஆப்பிரிக்கர்களே ஆள வேண்டும், அதன் வளங்கள் அதன் மக்களுக்கே சொந்தம்" என்று உரக்கச் சொன்ன ஒரு தலைவனின் கனவு, சர்வதேச அரசியல் சூழ்ச்சிகளால் எப்படி ஒடுக்கப்பட்டது என்பதை வரலாறு என்றும் மறக்காது.
உண்மையான சுதந்திரம் என்பது வெறும் கொடி ஏற்றுவதில் இல்லை; அது உணவிலும், தண்ணீரிலும், பொருளாதாரத்திலும் தற்சார்பு அடைவதில்தான் உள்ளது என்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக