செவ்வாய், 3 நவம்பர், 2026

ஈரானின் கெஷம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்!!

ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கெஷம் தீவு மீது அமெரிக்கா ரகசியமாகத் தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

 இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அமெரிக்கா–ஈரான் இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியைத் தடுப்பதாகக் கூறி அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 

மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரித்தது. இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

கத்தார் தலைநகர் தோஹாவில் பல கட்டங்களாக பேச்சு நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தத்துக்கான நேர்மறையான அறிகுறிகள் இருப்பதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

 ஈரானின் அணுசக்தித் திறன் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், ஒன்றிரண்டு அணுசக்தி மையங்கள் மட்டுமே இருப்பதாகவும், அவற்றையும் விரும்பினால் 10 நிமிடங்களில் அழிக்க முடியும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார். 

ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமைந்துள்ள கெஷம் தீவில் ஈரானின் எண்ணெய் பொருளாதாரம் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் உள்ளன. ஏவுகணை இருப்புகள் உள்ளிட்ட ராணுவக் கட்டமைப்புகளும் அங்கு அதிகம் உள்ளன. 

போர் உச்சத்தில் இருந்த ஆண்டின் மத்தியில், தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ராணுவக் கட்டமைப்புகள் சேதமடைந்ததாகத் தெரிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks