முதல்வர் விஜய் வாழ்த்து
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பத்திரிகை வெளியீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2004-05-ம் ஆண்டில் இது 60,143 ஆக இருந்த நிலையில் 2024-25-ம் ஆண்டில் 1.54 லட்சமாக உயர்ந்துள்ளது.
பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சட்டம் -1955, பத்திரிகை, பருவ இதழ்கள் பதிவு சட்டம்- 2023 போன்றவற்றின் மூலம், பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. நாட்டில் செயல்படும் செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம் எனப்படும் ஆர்என்ஐ, பத்திரிகை, பருவ இதழ்கள் பதிவுச் சட்டத்தின் படியான ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக செயல்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
உண்மை, நேர்மை, நடுநிலை, நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக