பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட சோதனைக் கட்டளைக்கு அமைவாகவே இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டு நடவடிக்கையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை, குற்றப் பதிவுப் பிரிவு, பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவு மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் ஆகியன இணைந்து பங்களித்துள்ளன.
அவ்விடுதியில் தங்கியிருந்த 32 சீன நாட்டவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அவர்களின் பொறுப்பிலிருந்த 23 கணினிகள் மற்றும் அதன் உபகரணங்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக