நானுஓயா குளவி கொட்டு 6 மாணவர்கள் வைத்தியசாலையில் !
நானுஓயா - எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 6 மாணவர்கள் குளவிக்கு கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று (18) காலை பாடசாலை கட்டடமொன்றின் கூரையிலிருந்த குளவிக்கூடு கலைந்ததில், அங்கு நின்ற மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்தினரும் பிரதேசவாசிகளும், 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக