திங்கள், 12 அக்டோபர், 2026

மதுராந்தகம், தாராபுரம் தேர்தலில் வெற்றி தவெக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர், சட்டப்பேரவைத் தலைவர் முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

 மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர், தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதன் காரணமாக, அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் சுமார் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேபோல், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருவரும் வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றனர். 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகர் முன்னிலையில் இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னவர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks