திங்கள், 5 அக்டோபர், 2026

வடக்கு சுற்றுலாத்துறை முதலீடு செய்ய விரும்பும் நடிகை நமீதா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தியத் திரைப்படக் கலைஞர்களான நடிகை நமீதா மற்றும் வீரேந்திர சவுத்திரி தம்பதியினர், கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்திற்கு நேரில் சென்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன் மற்றும் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் தற்போதைய கள யதார்த்தம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. 

 வீரேந்திர சவுத்திரி மற்றும் நமீதா தலைமையிலான குழுவினரால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் அவற்றின் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks