செவ்வாய், 20 அக்டோபர், 2026

யாழ் பேராசிரியராகப் பணியாற்றி வரும் க.தி. கணேசலிங்கம்

ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும் அதன் ஒழுக்க விழுமியங்களுக்கும் இலக்கியமும், கல்வித்துறையும், அரசியல் கோட்பாடுகளும் கண்களாகப் பார்க்கப்படுகின்றன. 


ஆனால், அந்த உயர்தரப் பீடங்களில் அமர்ந்துகொண்டு அதிகாரத்தின் செருக்கோடு விளிம்புநிலைப் பெண்களின் வாழ்விலும், உடலிலும் விளையாடும் மிருகங்களை அடையாளம் காட்டுவதும், அவர்களைப் பாதுகாக்கும் போர்வைகளைக் கிழித்தெறிவதும், தமிழ்த்தேசியம் என்ற உன்னதமான கோட்பாட்டுக்குப் பின்னால் மறைந்துகொண்டு இழைக்கப்படும் கோரமான குற்றங்களை மூடிமறைக்க முயலும் மேட்டுக் குடி மனோநிலையை எதிர்த்து கேள்வி கேட்பதுமே எனது கட்டுரையின் முதன்மையான நோக்கம். 

சமூகத்தில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள், பல்கலைக்கழகங்களில் செங்கோல் ஏந்திப் பாடம் நடத்துபவர்கள், சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அனைவரும் தூய்மையானவர்கள் என்ற ஒரு மாயை காலம் காலமாக நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அந்த உயர்தர மேடைகளுக்கும் பட்டங்களுக்கும் பின்னால், மனிதாபிமானமற்ற கொடூரமான முகங்களை மறைத்துக்கொண்டு வாழும் மனித மிருகங்கள் எத்தகைய ஆபத்தானவர்கள் என்பதற்கு வரலாறு சில கறையான சாட்சிகளை விட்டுச் சென்றுள்ளது. 

அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் 2007 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் அரசறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் க.தி. கணேசலிங்கம் என்பவரின் விவகாரம். 

இது வெறும் ஒரு தனிமனிதனின் பாலியல் குற்றத்துடன் முடிந்துவிடவில்லை. தமிழ்த்தேசியச் சூழல், இலங்கை நீதித்துறை, அதிகார வர்க்கம், மற்றும் அரசியல் சுயலாபங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு குற்றவாளியைக் காப்பாற்ற முயன்றன என்பதன் முகத்திரைக் கிழிப்பாகவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். 

இன்று தமிழ்த்தேசிய அரசியலில் நாம் காணும் மிகப்பெரிய சாபக்கேடு என்னவென்றால் ஒருவன் கல்விமானாகவோ, பல்கலைக்கழகப் பேராசிரியராகவோ, அல்லது மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பில பேசுபவனாகவோ இருந்தால் போதும் அவன் செய்யும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் சகித்துக்கொண்டு அவனைத் தேசத்தின் காவலன் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் கோமாளித்தனமான மரபுதான் இன்றைய தமிழ்த்தேசிய மரபாக உள்ளது.

 பேராசிரியர் க. தி. கணேசலிங்கம் விவகாரத்தில் இந்த முத்திரையைக் குத்தி அவரை எதற்காகத் தமிழ்த்தேசியத்தின் காவலன் என்று கொண்டாடுகிறார்கள்? அவர் எழுதிய நூல்களுக்காகவா? அல்லது பொங்குதமிழ் ஏற்பாடுகளில் முன்னின்று அவர் செய்த வேலைகளுக்காகவா? 2007 ஆம் ஆண்டு காலப்பகுதி என்பது போர்ச்சூழல் தமிழர்களின் வாழ்வை உலுக்கிக் கொண்டிருந்த காலம். 

விடுதலைப் போராளிகள் இறுதிப் போருக்காகத் தங்களை அணியப்படுத்திவதிலே முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு வறிய குடும்பம் பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாகத் தங்கள் வீட்டின் பதின்மூன்று அகவையுடைய சிறுமியை பேராசிரியர் க. தி கணேசலிங்கத்தின் வீட்டுக்கு வேலைக்காக அனுப்புகிறது. 

எங்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பி அனுப்பப்பட்டதோ அதே யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகப் பேராசிரியரான க. தி. கணேசலிங்கத்தின் வீடு அந்தச் சிறுமிக்கு நரகமாக மாறியது. 

தன் வீட்டில் வேலைக்கு வந்த ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாழ்க்கையைக் குலைத்து அவளைப் பாலியல் வன்புணர்வு செய்து யாழ்போதனா மருத்துவமனைக்குத் துரத்திவிட்டுச் சிறைச்சாலை சென்று திரும்பியவரே இந்தப் பேராசிரியர் கணேசலிங்கம். 

இன்று அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடித் தீர்க்கிறது ஒரு கூட்டம். அந்தப் பேராசிரியர் செய்த காரியம் சாதாரண விடயமல்ல ஒரு சிறுமியின் உடல்மீதும் மனதின் மீதும்நடத்தப்பட்ட கோரமான பாலியல் வன்முறையது. 

பல்கலைக்கழக நாற்காலியில் அமர்ந்து கொண்டும், தமிழ்த்தேசியத்தின் காவலன் என்றும் அறம் பேசும் ஒருவன் தன் வீட்டுக்கு வேலைக்கு வந்த எளிய சிறுமியை வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்திய அந்தத் துயரம் வெளியில் கசிந்தபோது யாழ் போதனா மருத்துவமனை வரை அந்தச் சிறுமி கொண்டு செல்லப்பட்டாள். 

அதன் பின்னர் நிலைமை மோசமாகவே பேராசியிசியர் க. தி கணேசலிங்கம் சிறைச்சாலை வரை சென்றார். ஆனால் அங்குதான் இந்த வழக்குத் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டது. இது சாதாரணமானதொரு குற்ற வழக்கு அல்ல. பெரும் அரசியல் மற்றும் அதிகார பலம் கொண்டு மூடி மறைக்கப்பட்ட ஒரு பெரிய ஊழல் என்பது பின்னாளில் தெரியவந்தது. 

 இந்த விவகாரத்தில் குற்றவாளியைக் காப்பாற்ற எந்தளவிற்கு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன என்பதற்குப் பல சாட்சியங்கள் உண்டு. பேராசிரியர் க.தி. கணேசலிங்கம் பொங்குதமிழ் ஏற்பாடுகளில் முன்னின்று உழைத்தவர் என்பதால் மேட்டுக்குடி வட்டத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவரைக் காப்பாற்றத் திட்டங்கள் தீட்டப்பட்டன. 

ஒருபுறம், க.தி. கணேசலிங்கம் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரைக் காப்பாற்றுவதற்காக புலிகள் அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்று படுகொலை செய்தனர் என்று புலி எதிர்ப்பாளர்கள் கதைகட்டினர். 

மறுபுறம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைப்பதை விடத் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவுமே இந்தக் கட்டவிழ்த்து விடப்பட்ட புனைவுகளை மக்களை நம்பவைக்கும் நாடகம் அரங்கேற்றப்பட்டு வந்தது. 

 அவசர அவசரமாக பேராசிரியர் கணேசலிங்கத்தின் வழக்கை தனிப்பட்டு எடுத்துச் செய்வதற்கா பெண் நீதிபதியான சிறிநிதி நந்தசேகரன் முன்வந்தார். அதே நேரம் கணேசலிங்கத்தின் தரப்பு சட்டத்தரணியாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ( TELO) சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா களமிறங்கினார். அதன் பின்னர் இந்த வழக்கில் நடந்தேறிய சதிவலைகள் மிகக் கொடூரமானவை. 

வழக்கு நடைமுறையில் இருந்த பொழுது பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி யாழ் போதனா மருத்துவமனையில் இருந்து சிறுவர் காப்பகத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் 2009 போர் இறுதிக் கட்டத்தை நெருங்குவதற்கு முன்னரே பத்திரமாகப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாள். 

ஆனால், சிறுமி தனது பெற்றோரின் வாழ்விடமான கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் யாழ் போதனா மருத்துவ அதிகாரிகளிடமும், இலங்கை காவல்துறையிடமும் அந்தச் சிறுமியின் நேரடி வாக்குமூலமும், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளும் அவள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக மிகத் தெளிவாக இருந்தன. 

அப்படியிருந்தும், இவ்வளவு ஆதாரங்கள் கையில் இருக்ககையில் இந்தப் பேராசிரியர் எப்படித் தப்பினார்? அந்தப் பிள்ளையின் வாக்குமூலம் அடங்கிய முக்கியமான மருத்துவக் கோப்புகள் திடீரெனக் எப்படிக் காணாமல் ஆக்கப்பட்டது? 

அதன் பின்னணயில் நடைபெற்ற சதி என்ன? இதில் இந்த வழக்கைத் தனிப்பட்ட முறையில் தானே விரும்பி முன்னெடுத்ததாகச் சொல்லப்படும் பெண் நீதிபதியான சிறிநிதியின் பங்கு என்ன? தமிழ்த்தேசியம் பேசிவிட்டு நீதிமன்றத்தில் இந்தப் பாலியல் குற்றவாளிக்காக வாதாடச் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தைச் ( TELO) சேர்ந்த நல்லதம்பி சிறிகாந்தா போன்ற சட்டத்தரணிகள் எதற்காக இவனுக்காகக் குரல் கொடுத்தனர்? 

சாட்சிகள் உயிரோடு இருக்கிறார்கள்! சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளாள்! மருத்துவப் பரிசோதனைகள் கையில் உள்ளன! ஆனால், திடீரென கோப்புகள் மாயமாகின்றன! சாட்சிகள் பலவீனப்படுத்தப்படுகின்றன!நீதிமன்றில் குற்றவாளி தப்பித்து விடுகிறான் என்றால் இங்கே அதிகாரமும் பணமும் எந்தளவிற்கு விளையாடியிருக்கிறது ? 

இது நீதிக்கே இழைக்கப்பட்ட கொடூரப் படுகொலை! இங்கு நான் சில வினாக்களை எழுப்ப விரும்புகிறேன். இந்த வழக்கின் போது ஊடகங்கள் ஏன் மௌனம் காத்தன? 

இந்த வழக்கின் உண்மைத் தன்மை ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டது? சாதாரண மனிதன் ஒரு சிறிய தப்பு செய்தாலும் அவனைச் சுற்றியிருக்கும் ஊடகங்கள் அவனது புகைப்படம் முதற்கொண்டு அத்தனை விவரங்களையும் பரபரப்பாக வெளியிடும். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து சாட்சிகள் மறைக்கப்பட்டு அதிகாரத்தின் மூலம் தீர்ப்பு குற்றவாளிக்குச் சாதகமாக மாற்றப்பட்டபோது தமிழ்த்தேசிய ஊடகங்கள் எங்கே போயின? 

 அதிகாரத்தில் இருப்பவர்கள், பண பலம் படைத்தவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றால் ஊடகங்களின் அறம் மழுங்கிவிடுமா? ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்குப் பின்னால் நடந்த சதிகளும் மக்களின் பார்வைக்கு வராமல் திட்டமிட்டு ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது ஏன்? 

எங்கட ஆள், தமிழ்த்தேசியம் பேசும் பேராசிரியர் என்ற போர்வையில் குற்றவாளியைப் பாதுகாக்க ஊடகத்துறையில் இருந்த சிலரும் உடந்தையாக இருந்தனரா? பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்ன செய்துகொண்டிருந்தது? 

ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஒருவன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பாய்ந்து அவன் சிறைச்சாலை வரை சென்று வந்த பின்னரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏன் அமைதி காத்தது? நீதிமன்றத்தில் வழக்கின் சாட்சிகள் மாயமாக்கப்பட்டு ஒருவனை யோக்கியன் ஆக்கப்பட்டுள்ள சதிவலையை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஏன் அறிந்திருக்கவில்லை ? 

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனிப்பட்ட குழு அமைத்து ஆராயாமல் இருந்தது ஏன்? மருத்துவ அதிகாரிகளின் அறிக்கைகளையும், அந்தச் சிறுமியின் ஆரம்பக் கட்ட வாக்குமூலங்களையும் மானியங்கள் ஆணைக்குழு பரிசீலிக்கத் தவறியது ஏன்? 

இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தைக் கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எந்த அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்தது? அரசியல் செல்வாக்கிற்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் அழுத்தங்களுக்கும் சோரம்போய்க் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பாலியல் குற்றவாளிக்கு மீண்டும் அதே பேராசிரியர் பதவியை வழங்கி மாணவர்களுக்குப் பாடம் நடத்த அனுமதித்தது எந்த வகையான கல்வி அறம்? 

மாணவிகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமும், மானியங்கள் ஆணைக்குழுவும் இத்தகைய குற்றப் பின்னணி கொண்ட ஒருவனுக்கு மீண்டும் அதே உயர்பதவியை வழங்கியதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் புனிதத் தன்மையையே குழிதோண்டிப் புதைத்துவிட்டன. அது அப்படியிருக்க இவர்களின் இன்னொரு முகத்தை எங்கு போய் முட்டிக்கொள்வது? 

 ஒருபுறம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இந்தியா அள்ளி வழங்கும் உதவித்தொகைகளையும் கோடிக்கணக்கான திட்டங்களையும் பெற்றுக்கொள்வதில் இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. மேடைகளில் இந்தியாவைக் கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டு மறுபுறம் அதே இந்திய அரசின் சலுகைகளையும் அங்கீகாரங்களையும் வைத்துக்கொண்டு பல்கலைக்கழக நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு சுகம் காண்கிறார்கள்.

இந்த மனித மிருகத்தின் காமவேட்டைப் பசி இன்னும் நின்றுவிடவில்லை. பதவித் திமிரும், தன்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற அகந்தையும் இவனுக்குள் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதற்குப் பிற்காலச் சம்பவங்களே சாட்சி. அண்மையில் கூட அதே பல்கலைக்கழகத்தில் செயல்முறை காட்டுநராகச் செயற்பட்ட ஒரு பெண் பிள்ளையின் மீது தனது வக்கிரக் கரங்களை நீட்ட முயன்றுள்ளான் இந்தப் பேராசிரியர். 

 ஆனால், அந்தப் பெண்பிள்ளை தன் மீது கை வைக்க வந்த அந்த அயோக்கியனின் திமிரை முகத்திற்கு நேராக எதிர்த்து நின்று தட்டிக் கேட்டுள்ளாள். அந்தப் பேராசிரியரின் காமப்பசியைச் சகிக்க முடியாமல் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அந்தப் பிரிவை விட்டே உடனடியாக வெளியேறியுள்ளாள்.

 பதவிகளோ, பட்டங்களோ, அரசியல் சாயம் பூசிக்கொள்வதோ, அல்லது தமிழ்த்தேசியம் என்ற உன்னத கோட்பாட்டைப் போர்வையாகப் போர்த்துவதோ இத்தகைய கொடூரக் குற்றங்களுக்கு ஒருபோதும் கேடயமாக முடியாது. ஒரு பல்கலைக்கழகத்தின் கல்விப்புலத்தில் மாணவர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் வழிகாட்ட வேண்டிய ஒரு பேராசிரியர் தொடர்ச்சியாகப் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு காமுகனாக வலம் வருவதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? 

 அன்று, சாட்சிகள் மறைக்கப்பட்டு நீதி திசைதிருப்பப்பட்டதன் விளைவுதான் இன்றுவரை அவனுக்கு எந்தப் பயமும் இல்லாமல் பெண்களின் மீது கைவைக்கும் துணிச்சலைக் கொடுத்துள்ளது. 

பதவிகளில் இருப்பவர்களின் கொட்டமும், அவர்களின் காமவெறியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் குறைந்தபாடில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்களே சாட்சி. இதுபோன்று இன்னும் பல சம்பவங்கள் அங்கு அரங்கேறி வருகின்றன.

 இத்தகைய ஒருவனைப் பாதுகாத்துக்கொண்டு அவனுக்குத் தமிழ்த்தேசியத்தின் காவலன் என்று பட்டம் கட்டித் திரியும் இந்தச் சில்லறைக் கூட்டங்களுக்குச் சிறிதும் மனசாட்சியே இல்லையா? எமது சமூகத்தில் ஒரு பலவீனமான மனோநிலை உண்டு. ஏதோ ஒரு பட்டத்தை வாங்கிவிட்டு பதவி நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் அவன் செய்யும் கேடுகெட்ட செயலுக்கெல்லாம் வெள்ளை அடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

 "அவர் பெரிய பேராசிரியர் அவர் எப்படி அப்படிச் செய்வார்? என்று கேட்டுக்கொண்டே ஊரை ஏமாற்றும் அயோக்கியர்களைத் தலையில் சுமக்கிறார்கள். அன்று ஒரு பச்சிளம் பாலகியை வன்புணர்வு செய்த காமக்காடையன் க.தி. கணேசலிங்கத்தை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அவனை ஒரு கல்விமான் என்ற முகமூடியிலும் , தமிழ்த்தேசியக் காவலன் என்ற போர்வையிலும் மறைக்க முயன்றனர். 

தமிழ்த்தேசியத்தின் புனிதப் போர்வையை இத்தகைய காமுகர்களுக்குப் போர்த்தி அழகு பார்த்ததுதான் இந்தச் தமிழ்ச்சமூகம் செய்த மிகப்பெரும் பாவம். தமிழர்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடுவதாகச் சொல்லித் திரியும் பலரின் சுயரூபம் எத்தகையது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை பற்றி மேடைகளில் முழங்குபவன் தன் வீட்டு வாசலுக்கு வரும் விளிம்புநிலைப் பெண்கள் மீது அதிகார வெறியைத் தீர்த்துக் கொள்கிறான் என்றால் அவனுக்கும் ஊரில் உள்ள குற்றவாளிக்கும் என்ன வேறுபாடுள்ளது? 

ஆனால், இவனைப் போன்றோரைக் கொண்டு போய் தமிழ்த்தேசியத்தின் காவலர் என்று மேடைகளில் ஏற்றியும், அவர்களின் செயல்களை மூடி மறைக்க முயல்வதும் தமிழ்த்தேசியத்திற்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம். சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் சமூக ரீதியாக விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு எதிராக இழைக்கும் குற்றங்கள் எந்தக் காரணியாலும் நியாயப்படுத்தப்படவே முடியாது. 

இன்றைக்கும் கூட அவன் ஒரு பாலியல் குற்றவாளி நீதிமன்று வரை நடந்தவன் அவனைப் போய் ஆதரிக்கிறீர்கள்? என்று கேட்டால் இந்தக் குருட்டுத் தேசப்பக்தி கூட்டத்துக்குக் கோபம் வந்துவிடுகிறது. உடனே, கேள்விக் கேட்பவரைப் பார்த்துக் கத்துவார்கள், கதறுவார்கள். “அவர் எங்கட ஆள் அவர் தமிழ்த்தேசியத்துக்காக வேலை செய்தவர்.நீ எதிரி தரப்புத் துரோகி என்றும், இலங்கை புலனாய்வுக்கு வேலை செய்கிறாய் “ என்றும் கேள்வி கேட்பவரை இழிவு படுத்தும் மூடர் கூட்டம். 

 இங்கு நான் சில கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். தமிழ்த்தேசியம் என்பது பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான காப்பகமா? அல்லது பெண்களின் வாழ்க்கையைச் சிதைப்பவர்களுக்குத் தொண்டூழியம் செய்வதற்கான சங்கமா? 

தமிழ்த்தேசியம் என்பது வெறும் மேடைகளில் முழங்குவதும், நூல்கள் எழுதுவதும் மட்டும்தானா? அப்படியானால், விளிம்புநிலை மக்களின், ஏழைப் பெண்கள், சிறுமியர் பாதுகாப்பை உறுதிசெய்யாத தேசியத்தால் என்ன பயன்? இப்படியொரு கொடூரமான குற்றத்தைச் செய்து சிறைத்தண்டனை வரை சென்ற ஒருவன் மீண்டும் எந்தக் கூச்சமும் இல்லாமல் பல்கலைக்கழகப் பேராசிரியராகத் தொடர்வதையும், தமிழ்த் தேசியத்தில் மதிப்பான இடத்தில் உலாவுவதையும் பார்த்துக்கொண்டு தமிழ்த்தேசியம் பேசுவோர் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? 

 பல்கலைக்கழகம் என்பது மாணவர்களுக்கு அறத்தையும் மனிதநேயத்தையும் கற்றுத்தர வேண்டிய இடம். அங்கே குற்றப் பின்னணியும் ஒழுக்கக்கேடும் கொண்டவர்கள் பேராசிரியர்களாக வீற்றிருப்பதை எந்தக் கேள்வியும் கேட்காமல் சகித்துக் கொள்வதுதான் நீங்கள் கட்டியெழுப்பும் தமிழ்த்தேசியமா? 

 ஒருவர் தமிழ்த்தேசியம் பேசுகிறார் என்பதற்காகவோ அல்லது பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியில் இருக்கிறார் என்பதற்காகவோ அவர் செய்யும் கொடூரக் குற்றங்களை மன்னிப்பதும், மறப்பதும் தமிழ்த்தேசியத்திற்கே செய்யும் கொடூரத் துரோகம் என்று நீங்கள் அறியவில்லையா? கயவர்களையும் காமுகர்களையும் தங்களுக்குள் வைத்துக்கொண்டு பேசப்படும் எந்தவொரு தேசியமும் தூய்மையானதாக இருக்கவே முடியாது.

குற்றவாளிகளைக் களையெடுக்கும் துணிச்சல் தமிழ்த்தேசியத்திற்கு என்று வருகிறதோ அன்றுதான் எளிய மக்களுக்கான உண்மையான விடுதலை சாத்தியமாகும். பதவிகளோ, பட்டங்களோ, அரசியல் சாயங்களோ குற்றங்களுக்கு ஒருபோதும் கேடயமாக முடியாது! 

கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்களும், நீதித்துறையின் ஒரு பகுதியினரும் இணைந்து இந்தக் கொடூரமான குற்றத்தை மூடி மறைத்துவிட்டனர். 

ஆனால், இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கும் இலங்கை அரசிடம் நான் சில ஆணித்தரமான வினாக்களை சட்டபூர்வமாகவும், சமூக நீதி அடிப்படையிலும் முன்வைக்க விரும்புகிறேன். சமூக நீதி பேசும் தற்போதைய அரசுக்கு இந்தக் கோப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது தெரியாதா? 

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவோம் என்றும் பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் சுழியளவு சகிப்புத்தன்மை கடைப்பிடிப்போம் என்றும் முழங்கும் தற்போதைய அரசு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடரும் இந்த அதிகார மேட்டிமைத்தனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? 

 கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் மறுவிசாரணை நடத்துமா? 2007 ஆம் ஆண்டு நடந்த அந்தச் சம்பவத்தின் போது யாழ் போதனா மருத்துவமனை ஆவணங்களும் காவல்துறை முதற்கட்ட அறிக்கைகளும் அப்பட்டமாக மாயமாக்கப்பட்டன என்பது வெளிப்படையான உண்மை. அதனைத் தற்போதைய அரசும், கல்வி அமைச்சும் அப்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் செய்யப்பட்ட அந்தத் தவறான முடிவை மறுபரிசீலனை செய்ய முன்வருமா? 

பாதிக்கப்பட்ட சிறுமியின் தொடக்கக்கட்ட வாக்குமூலங்கள், யாழ் போதனா மருத்துவமனையின் அவசரப் பதிவேடுகள் ஆகியவற்றை வைத்து, இந்த வழக்கின் பின்னணியில் நடந்த சாட்சி அழிப்பு ,ஆவண மாயம் குறித்து ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்து மறுவிசாரணை செய்ய உத்தரவிடுமா? யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அரசு எப்படி உறுதி செய்யப் போகிறது? 

தொடர்ச்சியாகப் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அதே உயர்பீடத்தில் அமர்ந்துகொண்டு அரசுச் சம்பளத்தையும், பேராசிரியருக்கான சகல மரியாதைகளையும் அனுபவித்து வருவதை இன்றைய அரசும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?

தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவியர் பேராசிரியர்களின் காமவேட்டைக்குப் பலியானால் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியமோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, சமூக அமைப்புகளோ, அல்லது அரசாங்கமோ கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? குற்றங்களை மூடிமறைக்கத் துடிக்குமா? 

அல்லது உடனடியாகச் சம்மந்தப்பட்டவனைத் தண்டிக்குமா? தமிழ் மாணவிகளின் கண்ணீரும் சுயமரியாதையும் சிங்கள அரசுக்கு வெறும் பொருட்டாகியுள்ளதா? தமிழ்ப் பெண் பிள்ளைகள் வதைக்கப்படுவதை இந்தச் சிங்கள அரசும் வேண்டுமென்றே கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கிறதா? அல்லது தமிழ்ச் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய குற்றங்களுக்கு அதிகார மட்டத்திலேயே மறைமுகமான ஆதரவு வழங்கப்படுகிறதா? 

அரசு நிறுவனங்களுக்குள்ளும், பல்கலைக்கழக வளாகங்களுக்குள்ளும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறும் எந்தவொரு அரசும் சமூக நீதி பேசும் அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளத் தகுதியற்றது.

இறுதியாக இங்கு ஒரு வரலாற்று உண்மையைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த விவகாரம் வெளியில் வந்தவுடனே யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இருவரை புலிகள் உடனடியாக தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து விசாரணை செய்யத போது இழைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர். 

 அதன் பின்னர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சில கடுமையான எச்சரிக்கைகளை நினைவுபடுத்திய புலிகள் அவர்களை உடனடியாக அங்கிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தனர். அன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அந்த இருவரில் ஒருவர் இன்று உயிரோடு இல்லை. மற்றவர் இன்றைக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பேராசிரியராக உலா வருகிறார். 

அதே நேரம் 2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடொன்றில் இருந்து ஒரு மூத்த அரசியல் ஆய்வாளர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அண்ணாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஒரு முக்கிய நூலை மொழிபெயர்ப்புச் செய்வதற்காகப் பேராசிரியர் க. தி. கணேசலிங்கத்தின் உதவி தேவைப்படுவதாகவும் அவரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுக்கலாமா என்றும் கேட்டார்.

 அதைக் கேட்ட அடுத்த கணமே தமிழ்ச்செல்வன் அண்ணா உறுதியாகவும் அழுத்தமாகவும் கூறியவை “கணேசலிங்கத்துடனான தொடர்பை உடனடியாக நிறுத்துங்கள். அவரை வைத்து போராட்டத்திற்காக எந்தவொரு செயல்பாட்டையும் செய்யக்கூடாது என்று தேசியத் தலைவர் கடுமையான எச்சரிக்கையுடன் உத்தரவிட்டுள்ளார்!" என்றார். பாதிக்கப்பட்ட எளிய சிறுமியின் பக்கம் நின்று ஒழுக்கக்கேடான அந்தப் பேராசிரியரின் அயோக்கியத்தனத்தைக் கண்டறிந்து அவரை இயக்கத்திற்கான வேலைகளை செய்யவே கூடாது என்று முற்றாக ஓரங்கட்டியவர் எமது தேசியத் தலைவர் அவர்கள். ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன? எமது தேசியத் தலைவராலே அருவருத்து ஒதுக்கப்பட்டு "இவனெல்லாம் போராட்டத்திற்குத் தேவையில்லை" என்று தூக்கி எறியப்பட்ட ஒரு காமுகனைத் தான் இன்றைக்குத் தங்களை மட்டுமே தமிழ்த்தேசியத்தின் காவலர்கள் என்று மார்பு தட்டிக்கொள்ளும் சில சில்லறைக்கூட்டங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன!

 தலைவர் எதை எதிர்த்தாரோ, எத்தகைய ஒழுக்கமான தூய்மையான சமூகத்தைக் கட்டியெழுப்ப நினைத்தாரோ, அதற்கு முற்றிலும் எதிரான ஒரு பாலியல் குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குவதுதான் இவர்கள் பேசும் தமிழ்த்தேசியம் . 

எமது தேசியத் தலைவரால் ஒதுக்கப்பட்ட ஒருவனை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்றால், உண்மையில் நீங்கள் தலைவரின் வழியிலா பயணிக்கிறீர்கள்? 

அல்லது, தலைவரின் பெயரையும் தமிழ்த்தேசியத்தையும் பயன்படுத்திக் குற்றவாளிகளுக்குக் கவசம் அமைத்துக் கொடுக்கும் துரோகத்தைச் செய்கிறீர்களா? 

பின்குறிப்பு: உண்மையை உரத்துச் சொல்வது துரோகமன்று!

 குற்றவாளிகளைத் தலையில் தூக்கிவைத்துத் தாங்குவதும், அவர்களுக்குத் தமிழ்த்தேசியப் போர்வை போர்த்தித் தமிழ்த்தேசியக் காவலர் என்று கொண்டாடுவதுதான் தேசத்துரோகம் என்பதை இந்தச் சமூகம் உணரும் வரை என் பேனாவின் கேள்விகள் ஓயாது! 

 வன்னியூர்ப் பூங்குழலி..

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks