சனி, 3 அக்டோபர், 2026

நஞ்சாக மாறும் ரெட்டேரி ஏரி

ரெட்டேரி ஏரியில் தொடர்ந்து கழிவுநீர் கலப்பதால் நீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக திகழும் மாதவரம் ரெட்டேரி, 0.32 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. வறட்சி காலத்தில், சென்னையின் குடிநீர் தேவைக்கு, ரெட்டேரியில் இருந்து குடிநீர் எடுக்க, அரசு திட்டமிட்டது. 

இதற்காக, ரெட்டேரியை மேம்படுத்த, கடந்த திமுக ஆட்சியில், 2024 மே மாதத்தில், 43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதாவது ஏரியின் கொள்ளளவை, 0.32 டி.எம்.சி., கொள்ளளவில் இருந்து 0.42 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாக சீரமைக்கும் வகையில் பணிகள் தொடங்கின. 

நீர்வளத்துறையினர் சார்பில் பணிகள் நடந்து வந்த நிலையில், 2024 அக்டோபரில், அப்போதைய முதல்வர் ஸ்டாலின், ஆய்வு செய்து பணிகளை விரைவு படுத்த உத்தரவிட்டார். 

 தொடர்ந்து, ஏரிக்கான நுழைவாயில், கரையை சுற்றிலும் நடைபாதை, பூந்தோட்டங்கள் அமைத்தல் என, அழகுபடுத்தும் பணிக்கு, 13.12 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. மொத்தம், 56.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், இந்த ஏரி, போதிய பராமரிப்பின்றி சீரழிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஏரிக்குள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தொடர்ந்து கலப்பதுடன், கரைப்பகுதி மற்றும் நடைபாதைகளில் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. ஏரியின் பல பகுதிகளில் ஆகாயத்தாமரையும் அதிகளவில் படர்ந்துள்ளது.

குறிப்பாக, ஏரியின் கரையில் உள்ள இரும்பு வேலிகள் மற்றும் சுற்றுச்சுவரின் சில பகுதிகள் செடிகளால் மறையும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. மழைக்காலத்தில் ஆகாயத்தாமரை மேலும் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks