வியாழன், 22 அக்டோபர், 2026

ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற பாரிய அரச காணி மோசடி!

பத்தரமுல்ல பகுதியில் அரசாங்கத்தின் பொதுத் தேவைகளுக்காகவும், நிர்வாக நகர உருவாக்கத்திற்காகவும் பெறப்பட்ட பெறுமதிமிக்க அரச காணிகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷனவால் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த கனிகள் கடந்த காலங்களில் அரசியல் பின்னணி கொண்ட நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட தரப்பினருக்கும் முறைகேடான முறையில் தாரைவார்க்கப்பட்டுள்ளதாக அவரால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், '' பத்தரமுல்ல பகுதியில் உள்ள 27.87 பேர்ச்சஸ் அரச காணி, 'டி.ஏ.ராஜபக்ச நினைவு கல்வி, கலாசார மற்றும் சமூக நலன்புரி அறக்கட்டளைக்கு' 30 வருட குத்தகை அடிப்படையில், வெறும் 63,000 ரூபா என்ற மிகக் குறைந்த சலுகை விலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks