வியாழன், 22 அக்டோபர், 2026

கலா ஓயா வான் பாயும் நிலையை எட்டியது

கலா ஓயா பகுதிகளில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சி காரணமாக, கலா ஓயாவின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்கின் மட்டத்தை நெருங்கி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. 


 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் அதன் தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 

 அத்துடன், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 13,200 கன அடிக்கும் அதிகமான வேகத்தில் கலா ஓயாவுக்கு நீர் திறந்து விடப்பட்டு வருகின்றது. 

நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீரின் அளவைக் கொண்டு, எதிர்வரும் நேரங்களில் இந்த அளவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடமும், அப்பகுதியினூடாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி-அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். 

 இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த மாதம் 3 ஆம் திகதி முதல் இதுவரையில் 25 மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

 அதேபோல், முன்னர் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தின் காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில இடங்களில் பாறைகளும் மண் அடுக்குகளும் தற்போதைய மழையுடன் அவை அடித்துச் செல்லப்படும் கடும் அபாயம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks