சனி, 3 அக்டோபர், 2026

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்-கோடீஸ்வரன்

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரித்துள்ளார். 


 அக்கரைப்பற்றில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இடையே மோதல்களை உருவாக்கச் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சக்திகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

சுயநல அரசியல்வாதிகள், யூடியூபர்கள் மற்றும் சமூக வலைத்தளக் கருத்துப் பரப்புபவர்கள் தங்களின் அரசியல் தேவைகளுக்காக மக்களைப் பலிகடாவாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

இவ்வாறான தூண்டுதல்களுக்கு பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பலியாகாமல், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இந்த சதி முயற்சிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks