டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே (Office Train) இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இந்த விபத்தினால் ரயிலின் முன்பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரயிலின் சாரதியான டீ.ஏ.பி. செந்தநாயக, "பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது. நாங்கள் அதனைப் பார்க்கும்போது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. மண் திட்டில் மோதியவுடன் ரயில் தூக்கி வீசப்பட்டது. அவ்வாறு மோதிய வேகத்திலேயே பாறையொன்றில் மோதி சேதம் ஏற்பட்டது" எனக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக