ஞாயிறு, 11 அக்டோபர், 2026

ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 12 பேர் பலி!!

சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சமீபத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அண்டை நாடான யேமனில் உள்ள, ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களே இதற்குக் காரணம் என சவூதி தலைமையிலான கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான 3 மற்றும் 4 ஆம் முனையங்களைக் கொண்ட கிங் காலித் சர்வதேச விமான நிலைய வளாகத்தின் மீது ஏவுகணை ஒன்று தாக்கியதாக கூறப்படுகிறது. 

இறந்தவர்களில் நான்கு பேர் சவுதி குடிமக்கள், இரண்டு பங்களாதேஷ் நாட்டினர், ஒரு பாலஸ்தீனியர், ஒரு அமெரிக்க குடிமகன், ஒரு எகிப்தியர், ஒரு ஜோர்டானியர், ஒரு சிரியர் மற்றும் ஒரு சூடானியர் ஆகியோர் அடங்குவதாக சவுதி அறிக்கை தெரிவித்தது. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks