செவ்வாய், 13 அக்டோபர், 2026

எத்தியோப்பியா ஏமன் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 109 பேர் பலி!!

ஏமன் நாட்டை நோக்கிச் சென்ற அகதிகள் படகு, ஜிபூட்டி கடற்கரை அருகே கவிழ்ந்த விபத்தில் 15 குழந்தைகள் உள்பட 109 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 116 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, சர்வதேச அகதிகள் அமைப்பான ஐ.ஓ.எம். நேற்று தெரிவித்தது. 

சுமார் 350 பேருடன் சென்ற அந்தப் படகு, அக்டோபர் 8 மற்றும் 9-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிபூட்டி நாட்டின் துறைமுக நகரமான ஒபோக்கிற்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.விபத்தில் 80-க்கும் அதிகமானோர் உயிர் பிழைத்துள்ளனர். 

உயிர் பிழைத்த அனைவரும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் என ஐ.ஓ.எம். தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.இந்தச் சம்பவம் குறித்து எத்தியோப்பிய அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. 

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே உள்ள ஆபத்தான கடல் வழிகளில் அகதிகள் பயணம் செய்யும்போது இதுபோன்ற கோர விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks