அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, “இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கட்டார், ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய எட்டு நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஈரான், அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியிருந்தாலும், அமெரிக்க இராணுவப் படைகள் மத்திய கிழக்கில் இருந்து வெளியேறாது என்று பங்கேற்பாளர்களிடம் CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் குறித்தும் அவர் மாநாட்டில் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக