தியாகதீபம் தி*லீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நல்லூரில் உணர்வுபூர்வமாகத் தொடங்கின.
நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது வெண்கல உருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், மலர் தூவியும் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, தியாகதீபம் திலீபன் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிராக நல்லூர் வீதியில் நீராகாரமும் இன்றி சொட்டு நீரும் அருந்தாமல் தியாகதீபம் தி*லீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவடைந்தார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இவரது நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகின.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நேரமான காலை 9:45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மூத்த போராளியும், மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக