ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

புதுச்சேரி வில்லியனூரில் செவிலியர் கொலை

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனை செவிலியரை படுகொலை செய்து முட்புதரில் வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 புதுச்சேரி வில்லியனுரை அடுத்த கோபாலன்கடை பகுதில் உள்ள முட்புதரில் இளம் பெண் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக வில்லியனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்மபவ இடத்துக்கு வந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை மிட்டு பிரயோத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணை வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரனையில் இறந்தவர் வில்லியனூரை அடுத்த கோபலன்கடை பகுதியை சேர்ந்த தனுஷ்கோடியின் மகள் ஜெயஸ்ரீ என்பதும். இவர் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks