வியாழன், 17 செப்டம்பர், 2026

இந்தியாவுக்கு 100% வரி

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தீவிரமாக களமிறங்கியுள்ளது,

ரஷ்யாவின் எரிபொருளை வாங்கும் நாடுகள் மீது அதிகபட்சமாக 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இறுதி வாக்கெடுப்பு கட்டத்தை எட்டியுள்ளது! கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்த முதற்கட்ட நடைமுறை வாக்கெடுப்பில், இந்த மசோதா 214 – 211 என்ற மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 16-ஆம் தேதியான இன்று பிரதிநிதிகள் சபையில் இதன் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு ஏற்கனவே அமெரிக்க செனட் சபையில் அசுர ஆதரவு கிடைத்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 86 – 11 என்ற கணக்கில் செனட் சபை இதற்கு ஒப்புதல் அளித்தது. ரஷ்யாவின் எரிபொருள் வருமானத்தை அடியோடு முடக்குவது, தடைகளை மீறி நடக்கும் வர்த்தகத்தை தடுப்பது மற்றும் ரஷ்யா-ஈரான் மீதான தடைகளை மேலும் தீவிரப்படுத்துவது ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மசோதா விவாதத்திற்கு வந்ததில் இருந்தே, உலக நாடுகளின் பார்வையெல்லாம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது! 

டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர் ஸ்டெனி ஹோயர் கொண்டு வந்த திருத்தத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளின் பட்டியல் நேரடியாக சேர்க்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இந்தியா, சீனா, துருக்கி, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, யு.ஏ.இ., சிங்கப்பூர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டு, அவற்றின் மீது 100% வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டது. 

ஆனால், அமெரிக்கா உடனடியாக இந்தியா மீது 100% வரியை விதித்துவிடவில்லை! ஹோயர் கொண்டு வந்த அந்த குறிப்பிட்ட திருத்தத்தை ‘ஹவுஸ் ரூல்ஸ் கமிட்டி’ 3-7 என்ற கணக்கில் நிராகரித்து விட்டது. 

எனவே, இந்தியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்ட அந்த திருத்தம் தற்போதைய சட்ட வரைவில் இடம் பெறவில்லை. செனட் சபை அங்கீகரித்த அசல் மசோதாவிலேயே, ரஷ்யாவிடம் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் முக்கிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அதிபருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks