ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 100 ஆவது நாளைக் கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை (2026 ஓகஸ்ட் 08) 101 ஆவது நாளாக நீதவான் நீதிமன்றக் கண்காணிப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. 

இத் தொடர் அகழ்வுப் பணிகளில் இதுவரையில் மொத்தமாக 515 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 506 என்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கமைய, 47 ஆம் நாளான இன்றைய தின அகழ்வின் போது புதிதாக 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 05 என்புக் கூடுகள் சான்றுப் பொருட்களாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 

 அத்துடன், எழுமாறாகத் தோண்டப்பட்ட 2 சோதனைக்குழிகளில் ஒன்றிலிருந்து மனித என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, அடையாளம் காணப்பட்ட 515 என்புக் கூடுகளில் 506 என்புக் கூடுகள் நீதிமன்றக் கட்டுக்காவலில் வைப்பதற்காக முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


தலை இல்லாது, கைகள் கட்டியவாறான எலும்புக்கூடு செம்மணியில் அடையாளம்… செம்மணி - சித்துப்பாத்தி மனிப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது கழுத்துடன் துண்டிக்கப்பட்டு, தலை (மண்டையோடு) இல்லாத நிலையில், கைகள் கட்டியாவாறான மனித எலும்புக்கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூட்டு தொகுதியின் இரு கைகளும் கட்டியவாறு நெஞ்சோடு அணைத்த நிலையில் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks