திங்கள், 10 ஆகஸ்ட், 2026

உயர்தரப் பரீட்சை சிறப்பு போக்குவரத்து சேவை!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இன்று முதல் சிறப்புப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படவுள்ளன. 

இதற்காக சுமார் 1,700 “சிசு செரிய” பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரந்த தெரிவித்துள்ளார்.

 அதன்படி, உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை பாடசாலைப் பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.அத்தோடு, பரீட்சை நடைபெறும் காலத்தில் பாடசாலைப் பேருந்து சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக இயங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks