திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சாகர காரியவசம் கைது!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். 

 பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் பொதுமக்களிடையே ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையான நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொலிஸ்மா அதிபர் தொடர்பாகத் தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாகச் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks