வியாழன், 6 ஆகஸ்ட், 2026

உளைச்சலில் மைத்திரி கனடாவுக்குத் தப்பியோடிய மருமகள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

 இந்த விவகாரத்தில் மற்றொரு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.தஹாம் சிறிசேனவும் நாட்டை விட்டுத் தப்பியதாகச் செய்திகள் பரவிய நிலையில், அவர் தற்போது கொழும்பிலேயே இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்துடன் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். 

 இவ்வழக்கில் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பினால் மைத்திரிபால சிறிசேன பெரும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மைத்திரிபால சிறிசேன, மிகவும் மன உளைச்சலுடனும் கவலையுடனும் காணப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks