ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

50% இறக்குமதி வரி அமெரிக்கா - அதே அளவு வரி கனடா

அமெரிக்கா-கனடா இடையேயான இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான கனடா பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தது. இதற்கு பதிலடியாக அதே அளவுக்கான வரியை விதிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வடஅமெரிக்க நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் நீண்ட கால நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. கனடாவின் சரக்கு ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவுக்கே செல்கிறது. 

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்குப் பிறகு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருதரப்பு வர்த்தக கவலைகளை தீர்க்க இறுதிகட்ட பேச்சுவார்த்தை கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நள்ளிரவு தோல்வியில் முடிந்தது. 

இதைத் தொடர்ந்து, கனடாவின் ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக அமல்படுத்தியது. இது கனடா ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 5 சதவீதத்தை பாதிக்கும். ஏற்கனவே இந்த வரி விதிப்பு 3 நாட்களுக்கு முன்பு அமல்படுத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார். பேச்சுவார்த்தைக்காகவே இந்த அமலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks