செவ்வாய், 2 ஜூன், 2026

திருப்பத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயமடைந்த நபருக்கு தூய்மை பணியாளர் முதலுதவி அளித்தார்!!

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளித்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் நோயாளிகள் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. திருப்பத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயமடைந்த நபருக்கு தூய்மை பணியாளர் ஒருவர் முதலுதவி அளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதில் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். 

உள் நோயாளிகள் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் காலை 8 மணி முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளித்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளித்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks