புதன், 3 ஜூன், 2026

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அவதி!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால், சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் வசதி, கழிவறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, லிப்ட் செயல்படவில்லை என நோயாளிகள் குற்றச்சாட்டிவருகின்றனர்.

 5 தளங்கள் கொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். 

இதனால் முதியவர்கள் மற்றும் படுக்கையில் உள்ள நோயாளிகளை அழைத்துச் செல்ல பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். உடைமைகள், உணவுப் பொருட்களை நோயாளிகளுக்கு எடுத்துச் செல்ல 5 மாடிகள் ஏறி இறங்க வேண்டி உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். 

 கழிவறையில் தண்ணீர் தட்டுப்பாடு நிகழ்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையின் ஐந்து தளங்களிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரங்கள் கடந்த சில மாதங்களாகச் செயல்படவில்லை. 

இதனால் நோயாளிகள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதி. எனவே அரசு உடனடியாக தலையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks