சனி, 6 ஜூன், 2026

சகாரா பாலைவனத்தில் தாகத்தால் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்தனர்.

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலி மற்றும் அல்ஜீரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள 'அசமகா' பகுதியிலிருந்து மேற்கே 80 கிலோமீற்றருக்கும் அதிக (49 மைல்) தூரத்தில் இந்த லொறி இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் நைஜீரிய நாட்டவர்கள் என்பதுடன், அவர்கள் மாலி நாட்டில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சோகத்தை எதிர்கொண்டுள்ளனர்.

 இருப்பினும், இந்த விபத்திலிருந்து இருவர் மாத்திரம் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் தண்ணீரைத் தேடி 50 கிலோமீற்றருக்கும் அதிக (31 மைல்) தூரம் கால்நடையாகவே பயணித்து, பின்னர் 'அசமகா' பகுதியைச் சென்றடைந்துள்ளனர். 

அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட நைஜீரிய நிவாரணக் குழுவினர், குறித்த இடத்தை வந்தடைந்துள்ளனர். 

 அங்கு இயந்திரக் கோளாறுக்குள்ளான லொறிக்கு அடியிலும் அதனைச் சுற்றிலும் சிதறிக் கிடந்த 50 சடலங்களையும் மீட்டுத்துள்ளதுடன், பின்னர் அந்த சடலங்கள் அனைத்தும் அதே இடத்திலேயே கூட்டுப் புதைகுழியில் அடக்கம் செய்ய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படைகளை தாக்குதல்களால் திணர வைக்கும் ஹிஸ்புல்லா!!

வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான காலகட்டத்தில், தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேலியப் படைகளைக் குறிவைத்து 32 தனித்தனி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.


இத்தாக்குதல்களில் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் இலக்காக்கப்பட்டுள்ளன. தங்கள் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையில், இஸ்ரேலியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையிலும் அவர்களின் நிலைகளைக் குலைக்கும் வகையிலும் ஏவுகணைகள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களைத் தங்கள் போராளிகள் பயன்படுத்தியதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, இஸ்ரேலிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க போஃபோர்ட் கோட்டையைச் சுற்றி நிலைநிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலியப் படைகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அல்-கந்தூரியா, அல்-கந்தாரா, ஹடாதா, ஜவ்தார் அல்-ஷர்கியா, யோஹ்மோர் அல்-ஷகிஃப், ஒடைசே, நக்குரா மற்றும் அத்-திரி ஆகிய பகுதிகளில் இருந்த இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் வாகனங்களையும் தங்கள் போராளிகள் இலக்காக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. 

இதுதவிர, மேற்கு பெக்கா, ஜஹ்ரானி மற்றும் ஜவ்தார் அல்-ஷர்கியா ஆகிய வான் பகுதிகளில் பறந்த இஸ்ரேலிய விமானங்களைக் குறிவைத்து நிலத்திலிருந்து வான்நோக்கிப் பாயும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெள்ளி, 5 ஜூன், 2026

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை அறிவிப்பு!!

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது. இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை என காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

 இது குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் பாடல்களைப் பாடியமை மற்றும் அது தொடர்பான காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பரப்பியமை குறித்து யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, சந்தேகநபர் அந்த இசை நிகழ்ச்சியில் தான் பாடிய இரண்டு பாடல்களைத் தானே திருத்தி, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பெருமைப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

 தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவான உள்ளடக்கங்களை உள்ளடக்கி, அதனைப் பலரும் பார்க்கும் வகையில் அவர் திட்டமிட்டுப் பரப்பியுள்ளார் எனப் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் செயல் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 3 (ஜி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், சந்தேகநபர் கடந்த ஜூன் 03 ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வரும் ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, இலங்கையில் இசை நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடுவதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளதாகச் சில சமூக வலைத்தளங்களில் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இவை முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை. நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள ஏனைய சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டிய பொறுப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதைப் இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு தூக்குத் தண்டனை -சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அநுர உட்பட இந்த அரசாங்கம் எவ்வளவுதான் பெருமையடித்துக் கொண்டாலும் மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இந்த நாட்டிற்கான கடமையையும் சேவையையும் நிறைவேற்ற வேண்டும். இந்த அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்யும் தனது கடமையை நிறைவேற்றும் நாளில் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

இதுதான் யதார்த்தம் மற்றும் இதுதான் உண்மை. நாங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் உண்மையைப் பேச நாங்கள் அஞ்ச மாட்டோம்.

24 மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யலாம். மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, அவர் தூக்கிலிடப்படுவதுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹிஸ்புல்லா!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்கா ஆதரவளித்த போர்நிறுத்த நிபந்தனைகளை லெபனானின் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா இயக்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. 

ஈரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் தலைவர் நயீம் காசிம் (Naim Qassem) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தைகள் லெபனானுக்கு "வீணானவை" மற்றும் "அவமானகரமானவை" என்றும், லெபனான் மக்களின் பரந்த பிரிவினரால் இது முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

லெபனானுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பினர் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும் முன்னோடி பாதுகாப்பு வலையங்களை உருவாக்குவதன் மூலம், இஸ்ரேலும் லெபனானும் தங்களின் பலவீனமான போர்நிறுத்தத்தைப் புதுப்பிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

 அமெரிக்க வெளியுறவுத்துறை புதன்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இந்த ஒப்பந்தம் ஹிஸ்புல்லாவின் முழுமையான துப்பாக்கிச் சூடு நிறுத்தத்தை சார்ந்தே அமைந்துள்ளது என்று மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன. 

லெபனானில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இது ஒரு தற்காலிக போர்நிறுத்தமாக இருக்க வேண்டும் என்றால், இத்தாக்குதல்கள் அதை என்னவாக மாற்றுகின்றன. இதுவொரு சரணடைதலை போன்றதாகும் என்பதுடன் இது அமைதி ஒப்பந்தம் அல்ல. 

இது ஒரு சரணாகதி ஒப்பந்தம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். சாலையின் மறுபுறத்தில், 35 வருடங்களாகத் தனது குடும்பக் கடையை நடத்தி வரும் ஹாதி (Hadi) என்பவர், தனக்கு எந்த நம்பிக்கையும் தெரியவில்லை என்றும், இது ஒன்றும் புதிய உணர்வு அல்ல என்றும் கூறினார்.

வியாழன், 4 ஜூன், 2026

அவுஸ்திரேலியாவின் உலகின் மிக அதிக தூரம் பறக்கும் விமானம்!!

பயண வரலாற்றில், ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனத்தின் ‘புரொஜெக்ட் சன்ரைஸ்’ திட்டத்தின் சோதனை ஓட்டத்தை எயர்பஸ் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. 

இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்களை குவாண்டாஸ் நிறுவனத்துக்கு எயர்பஸ் நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது அந்த வகையில், கடந்த பத்தாண்டுகளாகத் திட்டமிடப்பட்டு வந்த இந்த திட்டம் இப்போது முக்கிய இலக்கை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தக் கனவு நனவாவதற்காக எயர்பஸ் நிறுவனம், இதற்கென பிரத்யேகமாக வடிவமைத்த ‘ஏ350-1000யுஎல்ஆர்’ ரக விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது நியூயார்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து சீனாவின் ஃபுஸோவ் நகருக்கு ஜியாமென் எயார் நிறுவனம், 19 மணி நேரம் 20 நிமிட இடை நில்லா விமான சேவையை வழங்கி வருகின்றது. 

இந்த உலக சாதனையை முறியடிக்கும் வகையில் தற்போது அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான சேவை (22 மணி நேர இடை நில்லா விமான பயணம்) அமையவுள்ளது. 

நெடுந்தூர வான்வழிப் பயணத்தில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள சோதனை பிரான்ஸ் நாட்டின் டூலூஸ்-பிளாக்னாக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதல் ‘ஏ350-1000யுஎல்ஆர்’ விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக எயர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றும் சில பிரதேசங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks