புதன், 27 மே, 2026

அமெரிக்க நீதித் துறையையே ‘வளைத்த’ அதானி!

இந்தியப் பெருமுதலாளியான கவுதம் அதானி, 10 பில்லியன் டாலர்களை (84,000 கோடி ரூபாய்) அமெரிக்காவில் முதலீடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான அனைத்து குற்ற வியல் மற்றும் சிவில் வழக்குகளையும் அமெரிக்க நீதித்துறை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி குழுமம் மீதான நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை (DoJ) முழுமையாக கைவிட்டு விட்டது; போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், வழக்கை மேற்கொண்டு நடத்தத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் முடிவு செய்ததாலும் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அதானி குழுமம் மீது அமெ ரிக்காவில் நடந்து வந்த அனைத்து சட்டப்பூர்வ விசாரணைகளிலிருந்தும் அதானி தப்பித்துக் கொண்டுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக-வின் ஆதரவால் உலகப் பணக்கா ரர்களில் ஒருவராக உயர்ந்த கவுதம் அதானி, அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி, கடந்த 2024 ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலர்களுக்கும் மேல் பணம் திரட்டியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீது குற்ற வியல் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டங்க ளுக்கான அனுமதியைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர்களை அதானி லஞ்சம் கொடுத்துள்ளார். 

அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற முதலீட்டை இவ்வாறு தவறான வழிகளில் அதானி பயன்படுத்தியுள்ளார் என்று அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் (SEC) சிவில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இவை மட்டுமல்லாமல், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அரபு அமீரகத்தைச்சேர்ந்த ஒரு வர்த்தகரிடமிருந்து ஈரான் எரிவாயுவை ஓமன் மற்றும் ஈராக் நாட்டு எரிவாயு என்ற பெயரில் வாங்கியதாகவும், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி அந்த வர்த்தகம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்தது.

இவ்வழக்குகளில் தனக்காக வாதாட, சல்லிவன் & குரோம் வெல் உள்ளிட்ட 5 முன்னணி அமெரிக்க சட்ட நிறுவனங்களை அதானி அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனங்கள் அதானியைக் காப்பாற்ற தீவிரமாக வேலை செய்து வந்த நிலையில் தான், 10 பில்லியன் டாலர் முதலீடு என்ற ‘சமரசத் திட்டம்’ மூலம் அனைத்து வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

 அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தால் அதானி மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த சில நாட்களஅமெரிக்க நீதித்துறையும், அதானி மீதான வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இதன்மீது மீண்டும் மேல்முறையீடு கோர முடியாது என்று வித் பிரிஜூடிஸ் (“With Prejudice”) என்ற முறையில் வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது.

 அமெரிக்கக் குற்ற வியல் நடைமுறைகளில் இதுபோன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவது மிகவும் அரிதானவை. ஒரு வழக்கை விரிவாக ஆய்வு செய்த பிறகு, அதை மேற்கொண்டு நடத்துவது தேவை யற்றது என்ற முடிவுக்கு வரும்போது மட்டுமே இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு அதானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. 

அதேபோல, எண்ணெய் வாங்கிய விவ காரத்தில் அதானி குழுமம் முழு ஒத்துழைப்பு வழங்கி, 275 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதால் அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.ுக்கு முன்பே, செய்திகள் வெளியாகின. 

அதன்படியே தற்போது நடந்துள்ளது. 10 பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுத்து, அதானி தப்பித்துக் கொண்டுள்ளார்.அவர் அதானி அமெரிக்காவில் 10 பில்லி யன் டாலர்கள் (சுமார் 84,000 கோடி ரூபாய்) முதலீடு செய்ய விரும்புகிறார். ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை அவரால் முதலீடு செய்ய முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

செவ்வாய், 26 மே, 2026

போதைப்பொருள் கடத்தல் 23 பிக்குகளும் விளக்கமறியலில்!!

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார். 

குறித்த பிக்குகள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி முறைமையூடாக முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஈரான் அமெரிக்கப் படைகள் புதிய தாக்குதல்களைத் தொடங்கின.

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹொர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) மீண்டும் முழுமையாகத் திறப்பது குறித்தும் கத்தார்தலைநகர் தோஹாவில் தீவிர இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) ஆகியோர் கத்தாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

 அமெரிக்காவுடனான முதற்கட்ட உடன்படிக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கு முன்னதாக, கத்தாரில் முடக்கப்பட்டுள்ள தங்களது 12 பில்லியன் டொலர் (Dollar) நிதிச் சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஈரான் முன்வைத்துள்ளது. 

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், கத்தார் தற்போது மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஈரானிய மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) இந்த நிதி விடுவிப்பு மற்றும் ஹொர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து ஒழுங்குமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

அமெரிக்க ஜனாதிபதி (President) டொனால்ட் டிரம்ப் தரப்பில் உடன்படிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து சாதகமான கருத்துக்கள் வெளியான போதிலும், ஈரான் தனது முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படுவதை முதற்படியாக வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தையில் இன்னும் சில இழுபறிகள் நீடிக்கின்றன. 

எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படலாம் என தோஹாவின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராணிப்பேட்டை மாமூல் கேட்ட விஜயகுமார் தவெகவில் இருந்து நீக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செங்கல்சூளை உரிமையாளர்களிடம் தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டார். மாமூல் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் செங்கல்சூளைகளை இழுத்து மூடுவோம் என்று மிரட்டினார். 

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் விஜயகுமாரிடம் இருந்து பதவியை பறித்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிரடியாக நீக்கியுள்ளது. 

சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியை பிடித்துவிட்டது. விஜய் முதல்வரானது முதல் தவெகவினர் ஆங்காங்கே அட்டூழியம் செய்து வருகின்றனர். மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டுஅதிகாரிகளிடம் கேள்வி கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வரிசையில் தான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக நிர்வாகி செய்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டசபை தொகுதிக்கு ஊட்டப்பட்ட கணியம்பாடி ஒன்றியத்தின் தவெக செயலாளராக விஜயகுமார் இருந்தார்.

 இவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கணியம்பாடி புதூரில் இயங்கி வரும் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகியோரின் செங்கல்சூளைகளில் புகுந்து மாதம் ரூ. 1 லட்சம் கொடுக்காவிட்டால் சூளைகளை இழுத்து மூடுவோம் என மாமூல் கேட்டு மிரட்டினார்.இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

போலீசார் சென்று சமாதானம் செய்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாலுகா போலீசாரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வேலூர் மற்றும் திருவண்ணாமலை பிரதான சாலையில் சாலை மறியல் நடந்தது. 

தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யவும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலிறுத்தினர். இந்நிலையில் தான் கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தவெகவின் பொறுப்பு அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; "ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு சட்டசமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்த டி விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார். 

இதனால் அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 25 மே, 2026

கனடாவில் காணாமல் போன பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு!!

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இரண்டு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், காணாமல் போன பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் காடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில் ஓல்ட் கோச் வீதிக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:40 மணியளவில், பிரசவித்த உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸாருக்கு முதன்முதலில் தகவல் கிடைத்தது.

23 வயதான அந்தப் பெண் தற்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்பு பிரசவத்தின் போது ஏற்பட்ட அவசர மருத்துவ நிலைமைகளால் நிகழ்ந்ததே தவிர, வன்முறை காரணமாக அல்ல என்று பொலிஸார் நம்புகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுடன் குழந்தை இல்லாததை அடுத்து, பச்சிளம் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான அவசரத் தேடுதல் வேட்டை சனிக்கிழமை காலை தொடங்கியது. 

பொலிஸாரும் தரைவழி மீட்புக் குழுவினரும் ஹாலிஃபாக்ஸின் வில்லட் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினர். பொலிஸ் தடயவியல் குழுவினர் அங்கிருந்த பெரிய குப்பைத் தொட்டிகளை சோதனையிட்டனர். 

விசாரணையில் கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையில் தேடுதல் திசை மாற்றப்பட்டது. பிராஸ்பெக்ட் வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் தேடியபோது, ஓல்ட் கோச் வீதிக்கு அருகில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

குழந்தையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய நோவா ஸ்கோடியா மருத்துவப் பரிசோதகர் குழுவினர் உடற்கூறாய்வு நடத்தவுள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை அன்று பெண்ணுக்குத் தெரிந்த நான்கு பேர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற இருவர் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவி கொலை கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி !

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த வழக்கில் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். 

தர்ம முனீஸ்வரன் உடலில் நகக்கீறல்கள் இருந்த நிலையில் மாணவியின் நகங்களில் சதைத்துணுக்குகள் இருந்தன. அந்த சதைத்துணுக்குகளின் டி.என்.ஏ.வை சோதனை செய்து தர்ம முனீஸ்வரனை போலீசார் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை 30 நாள் இலவசம்!

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை 30 நாள் இலவச வருகைப் பயண நேரத்தை அறிமுகப்படுத்துகிறது.இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், 25 மே 2026 முதல், குறிப்பிடப்பட்ட 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், சுற்றுலா நோக்கங்களுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் கட்டணமில்லா மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறத் தகுதி பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது. 

தகுதிபெறும் நாடுகள்: 

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், ​​பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஓமன், பாகிஸ்தான், போலந்து, கத்தார், ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள். 

 மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த, தூதரக, உத்தியோகபூர்வ, சேவை அல்லது சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் குடிமக்கள், இத்திட்டத்தின் கீழ் இலவச மின்னணு பயண அங்கீகாரத்தைப் (ETA) பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றும் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. 

 மேலும், மேற்கூறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் இலங்கையுடன் இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள மாலத்தீவுகள், செஷல்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மின்னணு பயண அங்கீகாரத்தைப் (ETA) பெற வேண்டும். 

தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், மாலத்தீவு நாட்டினர் ETA அமைப்பு மூலம் 90 நாள் சுற்றுலா விசாவைத் தொடர்ந்து பெறுவார்கள் என்று அது கூறியது. 

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ETA, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணமின்றி வழங்கப்படும். இருப்பினும், 25 மே 2026-க்கு முன்னர் செலுத்தப்பட்ட எந்த ETA கட்டணமும் திருப்பித் தரப்படாது.

இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகள் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் சுற்றுலா விசாவை (ETA) கட்டணமின்றிப் பெறத் தகுதியுடையவர்கள் (மாலத்தீவு நாட்டினர் 90 நாட்கள் பெறுவார்கள்). மேலும், 30 நாள் செல்லுபடியாகும் காலத்திற்குள் இலங்கைக்கு முதன்முதலில் வரும் நாளிலிருந்து இரட்டை நுழைவு வசதி அனுமதிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

தங்கள் தங்குதலை 30 நாட்களுக்கு மேல் நீட்டிக்க விரும்பும் பார்வையாளர்கள், பொருந்தக்கூடிய விசா கட்டணத்தைச் செலுத்தி, நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 

மேற்கண்ட பட்டியலில் இடம்பெறாத நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், இலங்கையின் வழக்கமான ETA விசா விதிமுறைகளுக்கு உட்பட்டே தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks