டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக
நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த
வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் நேற்று(24) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ காவல்துறையினர் குறித்ந சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கொழும்பு பகுதியில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த கெம்பியன் பகுதியை சேர்ந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்து அப்பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வந்ததையடுத்து குறித்த தம்பதியினர் நீண்ட காலமாக டிக்கோயா பகுதியில் வர்த்தககத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அண்மைக் காலமாக அந்த வர்த்தக நிலைய செயற்பாடுகளை மூடிவிட்டு, இருவரும் அங்கு தனியாக வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக