இதனால், அந்த இடம் சிறிது நேரம் பூட்டப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, அருகில் இருந்த ஒருவரும் சுடப்பட்டார். ரகசிய சேவை அமைப்பு கூறியது: “சந்தேக நபரின் ஆரம்ப துப்பாக்கிச் சூட்டில் அருகில் இருந்தவர் தாக்கப்பட்டாரா அல்லது அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது தாக்கப்பட்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ரகசிய சேவைப் பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்றும், இந்தச் சம்பவத்தால் ஜனாதிபதி பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், சட்ட அமலாக்க அதிகாரிகளின் “விரைவான மற்றும் தொழில்முறை நடவடிக்கையைப்” பாராட்டினார். வாஷிங்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தனது விருந்து மண்டபத் திட்டங்களைக் குறிப்பிடும் விதமாக, "எதிர்கால ஜனாதிபதிகள் அனைவருக்கும், வாஷிங்டன், டி.சி.யில் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகவும் பாதுகாப்பான மற்றும் பத்திரமான ஓர் இடத்தை அமைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது" என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, ஆனால் அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், கடந்த ஆண்டு அனுமதியின்றி வேறு ஒரு வெள்ளை மாளிகை சோதனைச் சாவடி வழியாக நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு, "விலகி இருப்பதற்கான உத்தரவு" பிறப்பிக்கப்பட்டதாகவும் பல அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்குச் சற்றுப் பிறகு, 17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ NW அருகே உள்ள வெள்ளை மாளிகை நுழைவாயிலில் இருந்த சோதனைச் சாவடியை ஒரு நபர் அணுகி, கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டதாக அமெரிக்க இரகசிய சேவை அமைப்பு கூறியது.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியைப் பாதுகாக்கும் இரகசிய சேவை அதிகாரிகள் பதிலுக்குச் சுட்டதில், "சந்தேக நபர் மீது குண்டு பாய்ந்தது. அவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் பின்னர் உயிரிழந்தார்" என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக