விக்னேஸ்வரன் இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் புகார் அளித்தபோது (புகார் எண். (CD/475//25/10), அவர்களின் ஆலோசனையின் பேரில் தர்ஷனியை வெளிநாட்டுக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் சென்று முறையிட்ட போது , அவர்கள் தன்னை தாக்கியதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்
இது தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி விக்னேஸ்வரனால் கொழும்பில் உள்ள வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,
(புகார் எண். CIB 11/264/289)
மேலும் தனது கணவருக்கு வீடியோவில் தர்ஷனி, கூறும் பொழுது தனக்கு வழங்க வேண்டிய நான்கு மாத நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டபோது, வீட்டின் உரிமையாளரின் காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் அவரது மகன் வந்து அவரை கடுமையாகத் தாக்கி தனது கால்களை பொலிஸ் காலணிகளால் மிதித்தும் முகம், தலை மற்றும் மார்புப் பகுதியில், இருந்து இரத்தம் வரும் வரை காலணிகளால் மிதித்து அழுத்தியதாகவும் தற்பொழுதும் காது மூக்கில் இருந்து இரத்தம் வருவதாக தனது மனைவி கூறியதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்
மேலும் சனிக்கிழமை இறுதியாக விக்னேஸ்வரனுக்கு தர்ஷனி தொலைசியில் மீண்டும் தொடர்பு கொண்டு மீண்டும் தான் தாக்கப்படுவதாகவும் குறித்த வீட்டிலிருந்து தன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகி வருவதாகவும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது இதையடுத்து விக்னேஸ்வரன் நுவரெலியாவில் அமைந்துள்ள வெளியுறவு சேவை அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டபோது
அங்கிருந்த அதிகாரி ஒருவர், நீங்கள் விரும்பியபடி பெண்களை அனுபவும் நாட்டிற்கு அழைத்து வரவும் முடியாது பெண்களைப் பராமரிக்க முதுகெலும்பு இல்லையென்றால் எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் .
அப்படி நாட்டுக்கு அழைத்து வர விரும்பினால், அவர்களுக்கு எட்டரை லட்சம் ரூபாய் செலுத்தவேண்டிவரும் . இறந்தாலும் பிணத்தை கொண்டவதற்கு பணம் வேண்டும் என கூறியதாக கூறுகின்றார்
தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்தும் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லையெனவும் ஆகவே தயவு செய்து தனது மனைவியை மீட்டுதருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக