வியாழன், 13 நவம்பர், 2025

எஹெலியகொட சட்டவிரோதமாக ஈட்டிய பெண் ஒருவரின் சொத்துக்களுக்கு தடை!!

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபானக் கடத்தல்களில் ஈடுபட்டு அதன் மூலம் சொத்துக்களை ஈட்டிய எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி, சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினால் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


 இதன்போது, மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி, சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி, 3 கோடி ரூபா பெறுமதியான மூன்று காணிகளையும், எஹெலியகொட இரத்தினபுரி வீதிக்கு அருகில் உள்ள 6 பேர்ச் காணியில் கடையுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றையும் கட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


இதையடுத்து, சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள், பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்குச் செயலிழக்கச் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks