வியாழன், 11 செப்டம்பர், 2025

மகிந்த கொழும்பு தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று (11) காலை வந்துள்ளனர். மகிந்த ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவர்கள் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. "ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்கனவே உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வரும் நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அவரும் அந்த சலுகையை இழந்துள்ளார்.அதன்படி, அவர் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks