மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேகநபருக்குச் சொந்தமான வயலில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், யானை தந்தங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் சுமார் ஒரு அடி நீளம் கொண்டவை என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களும், சந்தேக நபரும் இன்று (15) கஹடகஸ்டிகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக