இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டத்திற்கு பணிந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் நேபாளத்தில் கே.பி.சர்மா தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றது. பிரதமர் கே.பி.சர்மா பதவி விலகி அவரது ஆட்சி கவிழ்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தனர். நேபாளத்தின் இடைக்கால தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கியை (வயது 73) தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இடைக்கால அரசுன் தலைவராக பதவியேற்கும்படி சுசீலா கார்கிக்கு போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை சுசீலா கார்கி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நேபாள அரசின் இடைக்கால தலைவராக சுசீலா கார்கி இன்று பதவியேற்றுக்கொண்டார். இரவு 9 மணிக்கு நேபாளத்தின் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றார். இயல்பு நிலை திரும்பிய நிலையில் காத்மாண்டு உள்ளிட்ட இடங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக