அதே நாளில், சம்பல் நீதிமன்றத்தில் ஜாமா மசூதி வழக்கின் விசாரணை நடைபெற்றது. எனவே, காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஜாமா மசூதியின் இரண்டாவது கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கு வெடித்த வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்தனர். எனினும், நான்கு பேர் மட்டுமே இறந்ததாக காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.ஜாமா மசூதி மட்டுமின்றி நீதிமன்ற வளாகத்திலும் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக, மொராதாபாத் ஆணையர் ஆஞ்சநேய குமார் கூறினார்.
வெளிமாவட்டங்களில் இருந்து வந்த போலீசார் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
“மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு காவல்துறை முன்னுரிமை கொடுக்கிறது. நாங்கள் சம்பல் நகர மக்களுடன், குறிப்பாக முஸ்லிம் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அமைதியையும் ஒழுங்கையும் பேணுவதாக மசூதி கமிட்டி உறுதி அளித்துள்ளது.” என்று பிபிசியிடம் பேசிய ஆஞ்சநேய குமார் கூறினார்.
"முஸ்லிம் சமூக மக்களும் அமைதியை மீட்டெடுக்க ஒத்துழைத்து வருகின்றனர்" என்றார்.
தற்போது சம்பல் நகரில் இயல்பு நிலை திரும்புவதாக கூறும் ஆஞ்சநேய குமார், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு நிலைமை மேலும் சீராகும் என்றார்.
ஜாமா மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், மசூதிக்கு வருபவர்களின் பாதுகாப்புக்காக தான் இதை செய்கிறோம் என்றும் அவர் கூறுகிறார்.“அந்த சம்பவத்திற்கும் பிறகும் மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடந்து வருகிறது.
இந்த வெள்ளிக்கிழமையும் வழக்கம் போல் தொழுகை நடத்தப்படும், இன்ஷா அல்லாவிற்கான தொழுகை எப்போதுமே ஜாமா மசூதியில் நடைபெறும்” என்று மசூதி நிர்வாகக் குழுவின் தலைவரும் வழக்கறிருமான ஜாபர் அலி பிபிசியிடம் கூறினார்.
சம்பல் பகுதியை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக