வெள்ளி, 22 நவம்பர், 2024

நீலகிரி பழங்குடியின குடும்பத்தினருக்கு இலவச சோலார் மின் விளக்கு.

நீலகிரி மாவட்டம், முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளி கிராமத்தில் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி விபிஜி குணசேகர் முயற்சியால் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சோலார் மின்விளக்குகள் வழங்கப்பட்டது. இங்கு மின் இணைப்பு கிடைக்காத, வசதி இல்லாத பழங்குடியின குடும்பங்களில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு சிரமப்படடு வந்தனர்.

இதையடுத்து குழந்தைகள் மாலை மற்றும் இரவு நேரத்தில் பாடங்களை படிப்பதற்காகவும், வீடுகளில் ஓரளவிற்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலவசமாக 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் முகமது கனி, வழக்குரைஞர் செவ்விளம்பரிதி, பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி மற்றும் முதுகுளி மறுவாழ்வு சங்கத்தலைவரும் டிவி சுரேஷ், பழங்குடி மக்கள் சங்க தலைவர் தேவதாஸ், பேபி நகர் பழங்குடி மக்கள் சங்கத்தலைவி கமலாட்சி மற்றும் நிர்வாகிகள் சுசீலா, லலிதா, வேலு, பொம்மி, வாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு சோலார் மின் விளக்குகள் கிடைக்க உதவியாக இருந்த பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி விபிஜி குணசேகரனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

வங்கி மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைத் திரும்பப்பெறும் உரிமை £100 !!

மோசடி பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிகள் மற்றும் பிற கட்டண நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிகள் கடந்த மாதம் அமலுக்கு வந்...